முக்கிய செய்தி
சீமெந்து விலையை அதிகரிக்க முயற்சி..!
சீமெந்து இறக்குமதி நிறுவனங்கள் விலையை அதிகரிக்கச் செயற்படுவதாகவும் அதனைத் தடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்,இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றத்தின் தலைவரும் தேசிய நிர்மாண சங்கத்தின் முன்னாள் தலைவருமான சுசந்த லியனாராச்சி தெரிவித்தார்.மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் கைத்தொழில் துறை மற்றும் அனைத்து வர்த்தகத் துறைகளும் அதிக செலவீனங்களைச் சுமக்க நேரிடும் எனவும், இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் நேற்று (09) வெளியிட்டிருப்பதால், நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி பிரச்சினையை அடிப்படையாக வைத்து இதனை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.