முக்கிய செய்தி
சீன கப்பல் இலங்கையில் நங்கூரமிடுவதற்கு அனுமதி !
ஷி யான் 6 என்ற சீன ஆய்வுக் கப்பலை இலங்கையில் நங்கூரமிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இந்திய ஊடகம் ஒன்று இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.முன்னதாக, இந்த மாதம் இலங்கைக்கு பிரவேசிப்பதற்கான அனுமதியை குறித்த சீனக் கப்பல் கோரியிருந்தது.எவ்வாறாயினும், எதிர்வரும் நவம்பர் மாதத்தில் சீனக் கப்பலை நங்கூரமிடுவதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஷி யான் 6 என்ற சீனக் கப்பல் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடும் போது, அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க தயாராக இருக்க வேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.