Connect with us

முக்கிய செய்தி

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு: சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனை

Published

on

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் அணுகலைப் பாதுகாக்கும் கொள்கைகள் மற்றும் விதிகளை ஸ்தாபிக்குமாறு சர்வதேச நாணய நிதியம், இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தனியுரிமை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு வரைவுச் சட்டங்களைச் சுற்றி கடுமையான எதிர்ப்புகள் உள்ளன.

இந்தநிலையில் இந்த விடயங்களில் சரியான சமநிலை நிரூபிக்கப்படாவிட்டால், வெளிப்படைத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க ஆபத்து ஏற்படும் என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் 20 முதல் 31 வரையிலான மதிப்பீட்டுப் பணியைத் தொடர்ந்து செப்டம்பர் 30 அன்று வெளியிடப்பட்ட ஆளுகை கண்டறியும் அறிக்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு: சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனை | Right To Information Act Srilankan

இந்தநிலையில் தகவல் அறியும் குழுவின் ஆணையை நிறைவேற்றுவது, நிர்வாகத்திற்கு இன்றியமையாதது என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, தகவல் வெளியிடுபவர்களைப் பாதுகாக்க தெளிவான நடைமுறை விதிகளை நிறுவ வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.