முக்கிய செய்தி
மின் விசிறியில் மோதி 14 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு…!
புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் மின்விசிறியில் மோதி படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த மாணவன் வகுப்பறையில் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, நாற்காலியின் மேசை மீது ஏறிய போது, கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது தலையில் படுகாயமடைந்த மாணவன் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.புஸ்ஸல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.