முக்கிய செய்தி
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மர்ம கார்
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வெளிநோயாளர் பிரிவின் நிலத்தடி வாகன நிறுத்துமிடத்தில் கார் ஒன்று பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட குறித்த வாகனத்தின் உரிமையாளரை உறுதிப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.குறித்த கார் சுமார் ஐந்து நாட்களாக வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அதன் பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.வாகன தரிப்பிடம்குறித்த கார் 2020ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.