முக்கிய செய்தி
ஜனாதிபதி நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தை சந்தித்தார்.
நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் உடன் கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பின் போது, பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில் இலங்கை மக்களுடன் பொதுச் செயலாளர் ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.ஜனாதிபதி விக்கிரமசிங்கவும், செயலாளர் நாயகமும் பொருளாதார நிலைமை உள்ளிட்ட உள்நாட்டு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.செயலாளர் நாயகம் இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு ஐ.நாவின் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதற்கும் சிறந்த சர்வதேச நிதி கட்டமைப்பிற்கு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார்.