முக்கிய செய்தி
அவிசாவளை யில் துப்பாக்கி சூடு இருவர் பலி
அவிசாவளை இஹல தல்துவ, குருபஸ்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.நேற்றிரவு(20) முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நால்வர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்,துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.துப்பாக்கிச் சூட்டில் தல்துவ பகுதியைச் சேர்ந்த 27, 36 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் தப்பியோடிய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.