முக்கிய செய்தி
கொழும்பு சிறைகளில் தட்டம்மை பரவுவல்
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, சமீப நாட்களாக மெகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளிலும் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட கைதிகள் பதிவாகியுள்ளனர்.இந்த நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 30 கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ளதோடு, சிறைச்சாலைகளில் நோய் பரவாமல் தடுப்பதற்காக சிறைச்சாலைகளில் தடுப்பு ஊசி போடும் திட்டத்தை சிறைச்சாலைகள் திணைக்களம் நடைமுறைப்படுத்தியுள்ளது.