முக்கிய செய்தி
புதையல் தேடிய குற்றச்சாட்டில் தேரர் கைது
பதுளை- மிகஸ்பிட்டிய கொஹன பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் புதையல் தேடிய குற்றச்சாட்டில் தேரர் உட்பட 7 பேர் பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யபட்டவர்களிடம் இருந்து புதிய வகை டிஜிட்டல் ஸ்கேனிங் இயந்திரம் மற்றும் ஏராளமான பூஜை பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அம்பலாங்கொட பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் 50 வயதுடைய தேரர் ஒருவரும் மற்றும் கம்பஹா பகுதியைச் சேர்ந்த பூசாரி ஒருவர் உட்பட 5 பேர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் உபகரணங்களை பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.