முக்கிய செய்தி
மின் இணைப்பை துண்டிக்கச் சென்ற மின்சார சபை ஊழியர் மீது தாக்குதல்
புத்தளம் பகுதியில் மின் இணைப்பை துண்டிப்பதற்கு சென்ற மின்சார சபை ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக மின் கட்டணம் செலுத்தாமையினால் மின்னிணைப்பை துண்டிப்பதற்காக சென்ற மின்சார சபையின் ஊழியர் ஒருவரை நபர் ஒருவர் தாக்கியுள்ளார்.தாக்குதலுக்கு இலக்கான மின்சார சபை ஊழியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தலைமறைவாகியுள்ளார்.
தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.