Connect with us

முக்கிய செய்தி

புதிய மத்திய வங்கிச் சட்டத்தினால் அரசாங்கத்திற்கு ஏற்படவுள்ள சிக்கல்

Published

on

 

புதிய மத்திய வங்கிச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் பணத்தை அச்சிடுவதற்கான கோரிக்கைகளை முன்வைக்கும் அரசாங்கத்தின் வாய்ப்புகள் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சட்டத்தின் மூலம் மத்திய வங்கியை மேலும் சுதந்திரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

“புதிய மத்திய வங்கிச் சட்டம் நடைமுறையில் உள்ளது. அதன் சிறப்பு என்னவென்றால், மத்திய வங்கியின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு வழிவகுக்கும்.

இது மக்களின் இறைமையுடன் மத்திய வங்கியின் பிணைப்பை மேலும் விரிவுபடுத்தும். இந்த சட்டத்தின் முக்கியமான விடயம் பணம் அச்சிடுவது.

இது தொடர்பில் கடந்த காலங்களில் நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டது.

புதிய மத்திய வங்கிச் சட்டத்தினால் அரசாங்கத்திற்கு ஏற்படவுள்ள சிக்கல் | New Central Bank Act Limits Govt Dollar

பணத்தை அச்சிடுவது பொருளாதார சிக்கல்களை எவ்வாறு பாதித்தது என்பதை அனைவரும் கடந்த காலங்களில் அறிந்திருந்தோம். புதிய மத்திய வங்கி சட்டத்தின்படி, பணத்தை அச்சிடுமாறு மத்திய வங்கி அரசாங்கத்திடம் கோரலாம்.

இந்த விடயம் சிறப்பு பாதுகாப்பு பிரச்சினையாக ஏற்பட்டால், நாடு மூடப்படும்.

இந்த சட்டத்தின் மூலம் திறைசேரி செயலாளர் மத்திய வங்கியின் ஆளுநர் சபையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது” இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்