முக்கிய செய்தி
‘சேனல் 4’ குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால் குழு நியமனம்
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானிய ஊடகமான “சேனல்-4” மூலம் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு படி, இந்தக் குழுவுக்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாம் தலைமை தாங்குவார்.ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி ஏ.சி.எம். ஜயலத் வீரக்கொடி & ஹர்ஷ ஏ.ஜே. சோசா பிசி ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
செப்டெம்பரில் ஒரு காணொளியை வெளியிட்டு, ‘சேனல் 4’ சில இலங்கை அரசாங்க அதிகாரிகள் குண்டுவெடிப்புகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டும் உயர்மட்ட தரப்பினருடன் பிரத்தியேக நேர்காணல்கள் இருப்பதாகக் கூறியது.இந்த காணொளியின் படி கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் அரசியல் கட்சியான தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் (TMVP) முன்னாள் பேச்சாளர் ஆசாத் மௌலானாவும் உள்ளார்.
‘சேனல் 4’ காணொளியில் தோன்றிய ஆசாத் மௌலானா, ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் கிழக்கில் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சல்லே ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, இராஜாங்க அமைச்சர் பிள்ளையான், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் அல்லது குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என மறுத்துள்ளார்.
இதற்கிடையில், 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளதாகக் கூறப்படும் சதித்திட்டம் குறித்து விரிவான சுதந்திரமான சர்வதேச விசாரணையைத் தொடங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்கத்திற்கு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார்.“சுதந்திரமான, பாரபட்சமற்ற, நியாயமான, வெளிப்படையான மற்றும் பரந்த” விசாரணையின் அவசியத்தை கொழும்பு பேராயர் வலியுறுத்தியுள்ளதுடன், இது ஒரு சுயாதீன சர்வதேச குழுவால் நடத்தப்பட வேண்டும் என்றும் கொழும்பு பேராயர் வலியுறுத்தியுள்ளார்.
2019 நவம்பரில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவிக்கு வருவதற்கான சூழலை உருவாக்குவதற்காக, ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக சனல் 4 காணொளியில் முன்வைக்கப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டு.குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த கோட்டாபய ராஜபக்ஷ , Chanel 4 இன் சமீபத்திய காணொளி 2005 இலிருந்து ராஜபக்சவின் பாரம்பரியத்தை இருட்டடிப்பு செய்யும் நோக்கில் ராஜபக்சவுக்கு எதிரான கோஷம் என்றும், அதே சேனல் ஒளிபரப்பிய முந்தைய படங்களைப் போலவே பொய்களின் திணிவு என்றும் தெரிவித்துள்ளார்.தன்னை ஜனாதிபதியாக்குவதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகள் குழு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியதாக கூறுவது அபத்தமானது என்றும் கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.