முக்கிய செய்தி
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 09 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 405 ஆக பதிவாகியுள்ளது அத்துடன், இம்மாதத்தின் கடந்த 06 நாட்களில் மாத்திரம் 22 ஆயிரத்து 896 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.