Connect with us

முக்கிய செய்தி

கடந்தாண்டு மத்திய வங்கி 207 பில்லியன் ரூபா பெறுமதியான நாணயத்தாள்களை அழிப்பு

Published

on

இலங்கை மத்திய வங்கி கடந்த ஆண்டு சேதமடைந்த அல்லது சிதைக்கப்பட்ட 238.5 மில்லியன் நாணயத்தாள்களை அழித்துள்ளது.மத்திய வங்கியின் கூற்றுப்படி, 2022 இல் அழிக்கப்பட்ட நோட்டுகளின் பெறுமதி ரூ. 207.3 பில்லியன்.நாட்டில் சுத்தமான மற்றும் தரமான நோட்டுகளின் புழக்கத்தை உறுதி செய்வதற்காக மத்திய வங்கி அவ்வப்போது சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களை அழித்து வருகிறது.மத்திய வங்கி 2021 இல் 108.2 மில்லியன் ரூபா மதிப்புள்ள நாணயத்தாள்களை அழித்ததுடன் அதன் பெறுமதி 44.3 பில்லியன் ரூபாவாகும், 2020 ஆம் ஆண்டில் 127.3 மில்லியன் மதிப்பிழந்த நாணயத் தாள்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி 62.2 பில்லியன் ரூபாவாகும்.மேலும், 2019 ஆம் ஆண்டில், 139.8 பில்லியன் ரூபா பெறுமதியான 235 மில்லியன் நாணயத்தாள்கள் மத்திய வங்கியினால் அழிக்கப்பட்டுள்ளன.

2018 ஆம் ஆண்டில் மொத்தமாக 343.8 மில்லியன் சிதைக்கப்பட்ட நாணயத் தாள்கள் அழிக்கப்பட்டதுடன் மத்திய வங்கியின் படி புழக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட நோட்டுகளின் மதிப்பு 252.2 பில்லியன் ரூபாவாகும்.