Connect with us

முக்கிய செய்தி

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜப்பான் பிரதமர்

Published

on

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.புதுடில்லியில் நடைபெறவுள்ள ஜி. 20வது அரச தலைவர் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வரும் ஜப்பானிய பிரதமர் இலங்கைக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எதிர்கால முதலீட்டு திட்டமிடல்இலங்கையின் முக்கிய அபிவிருத்தி உதவி பங்காளிகளில் ஒருவரான ஜப்பானிய தலைவர், நாட்டின் கடன் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி தலைமையிலான அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக மேலும் தெரியவருகிறது.இந்நிலையில் இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு இன்று(02.09.2023) இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.