முக்கிய செய்தி
சீன கப்பலுக்கு இலங்கை அனுமதி: அதிருப்தியில் இந்தியா
இலங்கையின் நீர்வள ஆராய்ச்சி நிறுவனமான நாராவுடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள ஷி யான் 6 கப்பலின் வருகைக்கு இலங்கை அரசு நேற்று அனுமதி வழங்கியிருந்தது.எனினும் இலங்கை இதற்கு வழங்கியுள்ள ஒப்புதலானது இந்தியாவிற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் வடிவமைப்பான சீ யான் 6 கலமானது உளவுத்துறை தகவல்களை திரட்டும் வல்லமை கொண்டதாக காணப்படுவதால் இந்தியாவின் அச்சம் மேலோங்கியுள்ளது.இந்நிலையிலேயே இந்திய பாதுகாப்பு அமைச்சர் இவ்வாரம் இலங்கைக்கு தனது விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.
மேலும், ஷி யான் 6 மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சரின் வருகை என்பது இலங்கையின் புலனாய்வு விடயங்களில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.