முக்கிய செய்தி
பல்கலைக்கழக நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு.!
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர் ஒருவர் பல்கலைக்கழக நீச்சல் குளத்தில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவன் எனவும், மட்டக்களப்பு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் எனவும் மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர். ஐந்து நண்பர்களுடன் நீராடச் சென்ற மாணவன் நேற்று ஆழ்துளையிலிருந்து குளத்தில் இறங்க முற்பட்ட போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.