முக்கிய செய்தி
யாழில் கோர விபத்து – சிறுவன் உயிரிழப்பு !
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை, கொற்றாவத்தை பகுதியில் இன்று (24) பகல் இடம்பெற்ற விபத்தில் 14வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.22 வயதான இளைஞர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.டிப்பரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் டிப்பருடன் மோதிய நிலையில், டிப்பரின் கீழ் பகுதியில் சிக்கி சிறிது தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.இதன்போது, மோட்டார் சைக்கிளின் பெற்றோல் தாங்கி வெடித்து தீப்பற்றியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 14 வயது சிறுவன் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த 22 வயதான மற்றுமொரு இளைஞர் பலத்த காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வண்ணான் தோட்டம், கொற்றாவத்தையை சேர்ந்த சிறுவனே உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.