முக்கிய செய்தி
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் தினம் அறிவிப்பு !
2022 ஆம் கல்வியாண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதியிலிருந்து 17 ஆம் திகதி வரை இடம்பெற்றது.27,8196 பாடசாலை பரீட்சாத்திகளும், 53,513 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் பரீட்சைக்கு தோற்றியிருந்ததோடு 2,200 மத்திய நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.