முக்கிய செய்தி
தாமரை கோபுரத்தில் புதிய மாற்றம் !
கொழும்பு தாமரைக் கோபுரத்தின் சுவர்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.கொழும்பு தாமரைக் கோபுரத்தின் பார்வையாளர் பகுதியில் கொழும்பின் புகழ்பெற்ற இடங்கள் பற்றிய விழிப்புணர்வு பலகைகளை காட்சிப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு அறையின் சுவர்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுடன், அவற்றை மீளமைப்பதற்கு பாரிய நிதிச்செலவு ஏற்படும் எனவும் கூறப்பட்டது.எனவே இதனை தடுக்கும் விதமாக ‘லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் கம்பனி பிரைவேட் லிமிடெட்,’ இவ் திட்டத்தை முன்னெடுத்துள்ளது