முக்கிய செய்தி
போதை பாவனைக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கடுமையாகும் சட்டம்
பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு உட்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கபடும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு அருகில் போதைப்பொருட்களை விற்பனை செய்வோர் தொடர்பில் பொலிஸார் மிகவும் கண்காணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான நபகர்களிடமிருந்து தமது பிள்ளைகளை பாதுகாக்கும் விடயத்தில் பெற்றோர் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுள்ளார்.
இவ்வாறான நபர்கள் அல்லது குழுக்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு அவர் பொது மக்களை கேட்டுள்ளார்.