முக்கிய செய்தி
அரச ஊழியர்களுக்கான பதவி உயர்வு குறித்து அமைச்சரின் ஆலோசனை
அரச ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியது அவர்களின் திறமைக்கு ஏற்பவே என அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தில வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.நீர் முகாமைத்துவப் பிரச்சினைஅவர் மேலும் தெரிவிக்கையில், அரச சேவையில் பொறுப்புணர்வின்மை காரணமாக நாட்டின் நீர் முகாமைத்துவப் பிரச்சினை மோசமடைந்துள்ளது.
எனது அமைச்சில் உள்ள எந்தவொரு அதிகாரியும் தமது பொறுப்பையும், பொறுப்புக்கூறலையும் நிறைவேற்றவில்லை என்றால் இது தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விசாரணையின் பின் நடவடிக்கைஇவர்கள் குறித்து அமைச்சின் செயலாளர் ஊடாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் நாம் ஒரு நாடாக உயர வேண்டுமானால், இந்த நாட்டில் உள்ள அரச ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியது அவர்களின் சேவைக் காலத்தின் அடிப்படையில் அல்ல, மாறாக அவர்களின் திறமைக்கு ஏற்பவே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.