முக்கிய செய்தி
அனுராதபுரப் பகுதியில் கோர விபத்து – தாயும் மகளும் பலி
அனுராதபுரம் – விலாச்சி வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதான பெண்ணும், 9 வயதான அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.
தாயும் மகளும் பலிஜெயந்தி சுற்றுவட்டத்தை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த பெண் ராஜாங்கனை 10ம் ராஹுல் வித்தியாலயத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.மதவாச்சியை சேர்ந்த 37 வயதுடைய டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.