Connect with us

உள்நாட்டு செய்தி

பொத்துவில் முதல் பொலிகண்டிவரையான போராட்டம் தொடர்கின்றது

Published

on

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிகோரும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி மட்டக்களப்பு தாழங்குடா நகரில் இருந்து ஆரம்பித்து காத்தான்குடி நகரை அடைந்துள்ளது.

2வது நாள் பேரணி இன்று காலை மட்டக்களப்பு தாழங்குடா நகரில் இருந்து ஆரம்பித்து காத்தான்குடி நகர எல்லைக்குள் நுழைந்த போது பெருமளவான முஸ்லிம் மக்களும் இணைந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது காத்தான்குடி நகரின் மத்திய பகுதியை பேரணி அடைந்துள்ளது.

எங்கே எங்கே உறவுகள் எங்கே?, எரிக்காதே எரிக்காதே ஜனாசாக்களை எரிக்காதே, எங்கள் நிலம் எமக்கு வேண்டும்., வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், வேண்டும் வேண்டும் உரிமை வேண்டும், திரும்பிப் பார் திரும்பிப் பார் சர்வதேசமே திரும்பிப் பார், வட கிழக்கு தமிழர்களின் தாயகம், ஐநா சபையே தலையிடு, வழக்கு, வழங்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கு போன்ற முழக்கங்களை பேரணியில் பங்கேற்றுள்ள மக்கள் ஒன்றாக ஓங்கி ஒலித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய பேரணியில் வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினர், பல்கலைக் கழக மாணவர்கள், தமிழ் தேசிய கட்சிகளை சார்ந்தவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், எஸ்.சிறிதரன், செல்வராசா கஜேந்திரன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்களும் பங்கேற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தின் இரண்டாம் நாளான இன்று (04) தாழங்குடாவில் இருந்து காத்தான்குடி ஊடாக திருகோணமலையை சென்றடைய போராட்டகாரர்கள் தீர்மானித்துள்ளனர்.