முக்கிய செய்தி
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திடீர் மின் தடை : காரணம் வெளியானது !
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று(14) ஏற்பட்ட திடீர் மின் தடைக்கு தொழில்நுட்ப கோளாறே காரணமென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையின் ஒரு பகுதிக்கு மின்சாரத்தை விநியோகிக்கும் மின் கம்பியில் ஏற்பட்ட சேதத்தினால் சில மணித்தியாலங்கள் மின் தடை ஏற்பட்டிருந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் குமார விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வைத்தியசாலையில் நேற்று சில சத்திரசிகிச்சை பிரிவுகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், தடைகளுக்கு மத்தியிலும் சத்திரசிகிச்சைகளை நிறைவு செய்ய முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.மின்சார சபை ஊழியர்கள் உடனடியாக வருகை தந்து மின் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.