முக்கிய செய்தி
சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட ஒன்பது இளைஞர்கள் கைது
மேல் மாகாணத்தின் கோரக்காபொல பிரதேசத்தில் இன்று அதிகாலை பண பந்தயத்திற்காக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட முற்பட்ட 9 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.காலி வீதியில் நடத்தப்படவுள்ள மோட்டார் சைக்கிள் போட்டி தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்து பாணந்துறை வடக்கு பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் கோரக்காபொல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் போட்டியை ஆரம்பிப்பதற்கு தயாரான நிலையில் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 மற்றும் 26 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் மொரட்டுவை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர்களுடன் நான்கு மோட்டார் சைக்கிள்களையும் பாணந்துறை வடக்கு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.