Connect with us

உள்நாட்டு செய்தி

மலையக தொழிலாளர் முன்னணியும் 1000 ரூபா போராட்டத்திற்கு ஆதரவு

Published

on

1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி எதிர்வரும் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு மலையக தொழிலாளர் முன்னணியும் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

அந்த முன்னணியின் இணைத் தலைவரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அ.அரவிந்தகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை கூறியுள்ளார்.

“5 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஒருநாள் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் மலையக தொழிலாளர் முன்னணியும் கலந்துக்கொள்ளவுள்ளது. காரணம் 1000 ரூபா போராட்டம் என்பது தொழிலளர்களின் வாழ்வாதார பிரச்சினையாகும். இந்த விடயத்தில் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் ரீதியாக பிளவுப்படாமல் ஒற்றுமையாக இருப்பது அவசியம். ஒற்றுமையாக செயற்பட்டால் கம்பனிகளுக்கு அழுத்தத்தை பிரயோகிக்க முடியும். மேலும் அரசாங்கத்திற்கும் தொழிலாளர்களின் ஒற்றுமை மெய்பிக்கப்படும். ஆகN மலையக தொழிலாளர்களின் நலன் கருதி இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளோம்.”