உள்நாட்டு செய்தி
இலங்கையில் தேசிய அரசு சாத்தியப்படாது

தற்போது குடும்ப ஆட்சி நடந்துக்கொண்டிருக்கும் இலங்கையில் தேசிய அரசு என்பது சாத்தியப்படாத விடயம். குடும்ப ஆதிக்கமே ஆட்சியில் கோலோச்சியுள்ளது.
அதனால்தான் விமல், கம்மன்பில போன்றவர்கள் வெளியேறியுள்ளனர் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.