முக்கிய செய்தி
இலங்கையில் செமன் மீன் சாப்பிடும் மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள மனித பாவனைக்கு தகுதியற்ற ஒரு வகை செமன் மீன் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.தேசிய நுகர்வோர் சங்கம் நடத்திய கூட்டமொன்றின் போது இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மனித பாவனைக்கு தகுதியற்ற இவ்வகை செமன் மீன்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முன்னணியின் நிதி முகாமையாளர் வசந்தகுமார ஹரிஷ்சந்திர தெரிவித்துள்ளார்.மனித பாவனைக்குஇறக்குமதி செய்யப்பட்ட சீன செமன் மீன் மனித பாவனைக்கு தகுதியற்றது என தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறி இந்த வகை செமன் வேறு லேபிள்களில் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.நீதவான் நீதிமன்றம்“சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு வகை செமன் மீன்களை தனியாகவும், டின்களை தனியாகவும் புதைக்க தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுவரை வேறு லேபிளில் எப்படி சந்தைக்கு வந்தது என தெரியவில்லை.இறக்குமதி செய்யப்பட்ட சீன செமன் 28.03.2021ஆம் திகதி அன்று உற்பத்தி செய்யப்பட்டது. காலாவதி திகதி 28.03.2024 என பதிவிடப்பட்டுள்ளது. அத்துடன் அதன் லேபிளும் மாற்றப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.