முக்கிய செய்தி
இந்திய முட்டைகள் காரணமாக, இலங்கையின் முட்டை விலை குறைவடைகிறது..!

எதிர்வரும் 02 அல்லது 03 வாரங்களுக்குள் சந்தையில் 45 ரூபா தொடக்கம் 50 ரூபா வரையான விலையில்,
முட்டையொன்றை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் நுகர்வோருக்கு கிடைக்கும் என அகில இலங்கை முட்டை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரத்திற்குள் சந்தையில் போதுமான அளவு முட்டை கையிருப்பு இருக்கும் என அதன் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முட்டை தொழிலில் உள்ள சில பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் முட்டை 40ரூபாவுக்கு இன்று முதல் பல்பொருள் வர்த்தக நிலையங்களில் இருந்து,
பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் நுகர்வோருக்கு கிடைக்கிறது என அரச வணிக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார்.
தற்போது கொழும்பு, களுத்துறை கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இறக்குமதி செய்யப்பட்ட முட்டை சதொச மற்றும் பல்பொருள் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.