Connect with us

முக்கிய செய்தி

தண்ணீர் கட்டணம் அடுத்த மாத முதல் அதிகரிப்பு!

Published

on

   எதிர்வரும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இதற்கான பிரேரணை அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் திருமதி வசந்தா இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை ஒப்புதல் அளித்தால் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் குடிநீர் கட்டணம் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும், குடிநீர் கட்டணம் எவ்வளவு சதவீதம் அதிகரிப்பது என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.