முக்கிய செய்தி
அரச குடும்பத்திடமிருந்து இலங்கையருக்கு வந்த நன்றி கடிதம்!
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோரின் முடிசூட்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்த கந்தலாய் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞருக்கு பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு நன்றியறிதல் அட்டையை அனுப்பியுள்ளது.முடிசூட்டுக்காக தயார் செய்த வைத்து அட்டையை 300 ரூபாய் செலவு செய்து இங்கிலாந்தில் உள்ள பக்காம் அரண்மனைக்கு அனுப்பியதாகவும், இந்த வாழ்த்து அட்டைக்கு 15 ஆம் திகதி பக்காம் அரண்மனையில் இருந்து அரச குடும்பத்தின் புகைப்படம் மற்றும் கையொப்பமிடப்பட்ட நன்றிக் கடிதம் அடங்கிய அட்டை கிடைத்ததாகவும் கந்தளாயை சேர்ந்த ஆர்.டபிள்யூ. மலித் திவங்கா கூறுகிறார் .இதுகுறித்து மலித் திவங்க மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முடிசூட்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பினேன். ஆனால் பதில் வரும் என்று நினைக்கவில்லை. அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ முத்திரையுடன் கூடிய ஒரு உறையில் எனக்கு நன்றி அட்டை அனுப்பப்பட்டது. பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து இப்படியொரு செய்தி இலங்கையில் ஒரு சாதாரண மனிதனுக்கு மிகவும் அரிதானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.