முக்கிய செய்தி
பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் யுவதி! விசாரணை அறிக்கை தொடர்பில் வெளியான தகவல்
பேராதனை வைத்தியச்சாலையில் செலுத்தப்பட்ட தடுப்பூசியினால் உயிரிழந்தாக கூறப்படும் 21 வயதான யுவதியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வயிற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் கடந்த 11 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட பொத்தபிட்டிய அலகல்ல பகுதியைச் சேர்ந்த சாமோதி சந்தீபனி மதுஷிகா ஜயரத்ன என்ற 21 வயதுடைய வைத்தியசாலையினால் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் உயிரிந்ததாக அவரது பெற்றோர் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐவரடங்கிய விசேட வைத்தியர்கள் குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, குறித்த குழு நேற்றைய தினம் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
இந்நிலையில், கண்டி தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு செஃப்ட்ரோஎக்சோன் எனப்படும் நோய்யெதிர்ப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய, யுவதியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது