முக்கிய செய்தி
பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் கொள்ளை

வெலிபென்னயில் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டிற்குள் நுழைந்து சொத்துக்களை கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் என தெரிவித்து வீட்டு உரிமையாளர்களை துப்பாக்கி மூலம் அச்சுறுத்தி, பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனிதக் கொலை மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்கள் தொடர்பான பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் வருகை தந்த மோட்டார் சைக்கிள் எகொடஉயன பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது. பாணந்துறை – வலான பகுதியை சேர்ந்த 23 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் இதுவரை 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.