Connect with us

முக்கிய செய்தி

வடக்கிற்கு 24 புதிய பேருந்துகள் கையளிப்பு

Published

on

இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட 24 புதிய பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் வைத்து வடக்கு மாகாண இ.போ.ச. சாலைகளுக்கு கையளிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற நிகழ்வில் பேருந்துகள் கையளிக்கப்பட்டது. அந்தவகையில் வவுனியா 4, கிளிநொச்சி 4, மன்னார் 3, முல்லைத்தீவு 3, யாழ்ப்பாணம் 4, பருத்தித்துறை 3, காரைநகர் 3 என 24 பேருந்துகள் வடமாகாண சாலைகளுக்கு பகிரப்பட்டது.குறித்த நிகழ்வில் போக்குவரத்து பெருந்தெருக்கள் ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் எஸ்.எம்.டி.அல்விஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த கெட்டகொட, ரகுமான் மற்றும் போக்குவரத்து சபை ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *