Connect with us

முக்கிய செய்தி

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்ப திகதி அறிவிப்பு

Published

on

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகும் திகதியைக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.அதன்படி உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி (2023) தொடங்கி டிசம்பர் 21 ஆம் திகதி முடிவடையும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.கடந்த ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சை நிலையான காலவரையறை இன்றி ஏப்ரல் தொடக்கம் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெற்றது.கல்வி அமைச்சர் நம்பிக்கைஎனினும் இனி வரும் காலங்களில் உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதங்களில் மட்டுமே நடைபெறும் என்றும் கல்வி அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.அதேவேளை டிசம்பரில் நடைபெற வேண்டிய இவ்வாண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் 2024ஆம் ஆண்டு மார்ச்சில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.2022ஆமு் ஆண்டு கல்வி ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.