முக்கிய செய்தி
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஆடுகள்: விவசாய அமைச்சு
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் விவசாய அமைச்சு ஆடுகளை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது .ஐந்து வருடங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 70,000 ஆடுகள் விநியோகிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.ரன்ன, வடிகல பிரதேசத்தில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவின் பங்கேற்புடன் இந்த வேலைத்திட்டம் இன்று (09) ஆரம்பமானது.அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள 07 விவசாய தொழில்முனைவோர் கிராமங்களுக்கு ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் 10 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு ஆடுகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.