முக்கிய செய்தி
கார் விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயம்
ஹெம்மாத்தகம – அம்புலுவாவ 3 ஆம் கட்டை பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டுவிலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.அவர்கள் ஹெம்மாத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கம்பளை உலப்பனை பிரதேசத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த குழுவினரே இவ்வாறு விபத்துக்குள்ளாகினர். காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமானதாக இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து குறித்து ஹெம்மாத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.