முக்கிய செய்தி
தரம் குறைந்த மருந்து இன்னொரு உயிரைப் பறித்தது – சஜித்
நாட்டில் தரம் குறைந்த மருந்துகள் பயன்படுத்தப்படுவதில்லை என சுகாதார அமைச்சர் மீண்டும் வலியுறுத்திய போதிலும் தரம் குறைந்த மருந்துகளினால் மற்றுமொரு மரணம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட Propofol மருந்தை செலுத்தியதால் காலியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மாதிரி தர சோதனைகளில் தோல்வியடைந்த மூன்று மருந்துகளில் ப்ரோபோஃபோலும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தரம் குறைந்த மருந்துகள் பயன்படுத்தப்படுவதில்லை என தெரிவித்ததாக எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.“தரமற்ற மருத்துவம் தொடர்பான சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க எங்களிடம் இடமில்லை அல்லது இதுபோன்ற சம்பவங்களை விசாரிக்கும் பிரிவு இல்லை. அதற்கான சரியான பொறிமுறையை நாம் கொண்டிருக்க வேண்டும்.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் திருடர்களின் கூடாரமாக உள்ளது. அதன் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியும் பொறுப்பேற்க வேண்டும்,” எனவும் குறிப்பிட்டுள்ளார்.