Connect with us

முக்கிய செய்தி

யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் மரணம்

Published

on

ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஹ்லந்த கிராம உத்தியோகத்தர் எல்லைக்குட்பட்ட அலகொலமட பகுதியில் யானை ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் உயிரிழந்துள்ளதாக ஹல்துமுல்ல வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் யானை ஒன்று இருப்பதாக கொஸ்லந்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹல்துமுல்ல வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படிஇ ஹல்துமுல்ல வனவிலங்கு அலுவலகத்தில் கால்நடை வைத்திய அதிகாரியுடன் உடவலவ வனவிலங்கு தள காவலர் டி.என்.கே. கொடிதுவாக்கு மற்றும் வனவிலங்கு அதிகாரி டெல்ஷான் பிரியதர்ஷன ஆகியோர் காயமடைந்த யானைக்கு தேவையான சிகிச்சைகளை நேற்று காலை வழங்கத் தொடங்கினர்.

சுமார் 30 வயது மதிக்கத்தக்க இந்த காட்டு யானையின் பின் காலில் துப்பாக்கியால் சுடப்பட்டதாக வனவிலங்கு அதிகாரி டெல்ஷான் தெரிவித்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் குறித்த காட்டு யானை உயிரிழந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *