முக்கிய செய்தி
கொழுப்பில் நடைபெறவுள்ள இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலா அமைப்பின் மாநாடு
இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலா அமைப்பான டிராவல் ஏஜென்ட் அசோசியேஷன் ஆஃப் இந்தியா 18 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் மாநாடு ஒன்றை நடத்தவுள்ளது.குறித்த நிறுவனம் தனது விமானப் பங்காளியான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுடன் இணைந்து 67 ஆவது மாநாட்டை 2023 ஜூலை 06 முதல் 09 வரை கொழும்பில் நடத்தவுள்ளது.இந்திய சுற்றுலா வர்த்தகத்தின் முதன்மையான வருடாந்த நிகழ்வான இந்த மாநாடு, பல வருட பின்னடைவைத் தொடர்ந்து இலங்கைக்கான இந்திய சுற்றுலாவை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியா சுற்றுலா வடிவமைப்புஇந்தியாவின் சுற்றுலாவை வடிவமைப்பதில் இந்த சங்கம் முக்கிய பங்கு வகிப்பதுடன் விமான நிறுவனங்கள், உட்பட இந்திய பயணத் துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.இந்த ஆண்டு மாநாட்டுக்கு ஏறக்குறைய 450 முகவர்கள் மற்றும் 50 சர்வதேச பயண ஊடக பிரமுகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.