முக்கிய செய்தி
வட்டியில்லா கடனுதவிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு
தனியார் பல்கலைக்கழகங்களுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (4) ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பிள்ளைகளுக்கு இன்று முதல் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தனியார் பல்கலைக்கழகங்களுக்கான அரச வட்டியில்லா கடன்களுக்கான விண்ணப்பங்களை www.studentloans.mohe.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக சமர்ப்பிக்க முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.