முக்கிய செய்தி
யாழ்ப்பாணம் – இரத்மலானை விமான சேவை ஆரம்பம்..!!
இரத்மலானையிலிருந்து – யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை ஆரம்பமாகியுள்ளது.
இந்த விமான சேவை மூலம் கொழும்பில் இருந்து ஒரு மணிநேரம் பத்து நிமிடத்தில் யாழ்ப்பாணத்தை அடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை வேளைகளில் குறித்த விமானம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் பயணிக்கும் பயணி ஒருவரிடமிருந்து ஒரு வழிக்கட்டணமாக 22,000 ரூபா அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரு வழிக்கட்டணமாக 41,500 ரூபாவும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பயணி ஒருவர் அதிகபட்சமாக 7 கிலோகிராம்(kg) நிறையுடைய பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.