முக்கிய செய்தி
பேராதனை பல்கலைக்கழகத்திற்கு படையெடுத்த மக்கள்!
பேராதனை பல்கலைக்கழகத்தை பார்வையிட இன்று(01.07.2023) பெருந்திரளான மக்கள் சென்றுள்ளனர்.
யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அண்மையில் அறிவிக்கப்பட்ட பேராதனை பல்கலைக்கழக நூலகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள மகாவம்சத்தின் (Great Chronicle) பழமையான ஓலையின் மூலப் பிரதியை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் வாய்ப்பளித்துள்ளது.
இது தவிர, பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திர அருங்காட்சியகம், ஜோர்ஜ் கீட்டின் ஓவியங்களின் தொகுப்பு மற்றும் பல்கலைக்கழகத்தின் 5,000 அரிய புத்தகங்களின் தொகுப்பும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 80 வருடங்களை பூர்த்தி செய்வதையொட்டி பேராதனை பல்கலைக்கழகம் இன்று முதல் பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.