Connect with us

முக்கிய செய்தி

14.2 வீதத்தால் மின் கட்டணம் குறைக்க அனுமதி !

Published

on

இன்று(01) முதல் அமுலாகும் வகையில், மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.14.2 வீதத்தால் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கே நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, 0 முதல் 30 வரையான மின் அலகுகளை பயன்படுத்துவோருக்கான கட்டணம் 65 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது. அந்த பிரிவில் ஒரு அலகு 30 ரூபாவில் இருந்து 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கான கட்டணம், 400 ரூபாவில் இருந்து 150 ரூபாவாக குறைகின்றது.60 அலகுகளுக்கு குறைவாக பயன்படுத்துவோரின் ஒரு அலகிற்கான கட்டணம் 42 ரூபாவில் இருந்து 32 ரூபாவாக குறைக்கப்படுவதோடு, மாதாந்த கட்டணம் 650 ரூபாவில் இருந்து 300 ரூபாவாக குறைக்கப்படுகின்றது.91 அலகுகள் முதல் 120 அலகுகள் வரை பயன்படுத்துவோரின் ஒரு அலகிற்கான கட்டணம் 42 இல் இருந்து 35 ரூபாவாக குறைகின்றது. இதற்கமைய, மாதாந்த கட்டணம் 1500 ரூபாவில் இருந்து 1000 ரூபாவாக குறைவதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.மதஸ்தலங்களுக்கான 16% கட்டண குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வருகின்றது.குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்தும் மதஸ்தலங்களுக்கு ஒரு அலகு மின்சாரம் 10 ரூபா வீதம் வழங்கப்படவுள்ளதோடு, உடனடியாக சூரிய சக்தியை நிறுவுமாறும் ஆணைக்குழு நிபந்தனை விதித்துள்ளது.ஹோட்டல் துறைக்கு 26.3% கட்டணம் குறைக்கப்படுகின்றது.கைத்தொழில் துறைக்கும் 9% கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.