Connect with us

முக்கிய செய்தி

சட்டமூல நீதி அமைச்சரினால் வர்த்தமானி வௌியிடு

Published

on

 கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரமளிக்கும் வகையில் 3 திருத்தச் சட்டமூலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவின் தனிநபர் யோசனையாக இந்த 3 திருத்தச் சட்டமூலங்களும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. பிரதேச சபைகள் திருத்தச் சட்டம், நகர சபைகள் கட்டளை திருத்தச் சட்டம், மாநகர சபைகள் திருத்தச் சட்டம் ஆகிய சட்டங்களின் சரத்துகள் சில இந்த சட்டமூலத்தின் மூலம் திருத்தப்படவுள்ளன. இதனிடையே, நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் தொடர்பான உத்தேச விதிமுறைகள் அடங்கிய புதிய சட்டமூலமொன்றும் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் நீதி அமைச்சரினால் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.