முக்கிய செய்தி
நூதன முறை ஹெரோயின் கடத்தல் – மூவர் கைது
நாட்டிற்கு இறக்குமதி செய்யும் உருளைக்கிழங்கு பொதிகளில் 16 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் கொண்டு வரப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுங்கத் திணைக்களத்தினர் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட உருளைக்கிழங்கு அடங்கிய கொள்கலன் ஒன்றை கடந்த 21ஆம் திகதி சோதனைக்கு உட்படுத்தினர்.அதில் 12 பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த போதைப் பொருள் தொகை மீட்கப்பட்டது.இதன்படி, கொள்கலனை இறக்குமதி செய்த நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய ஒருவர், கொள்கலனை பெற்றுக் கொள்வதற்கு தயாராக இருந்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அதற்கு உதவிய ஒருவர் அடங்களாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.