Connect with us

முக்கிய செய்தி

சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானம்..!

Published

on

சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது

ஜூலை முதல் வாரத்தில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படவுள்ளதாக  லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்

  சமையல் எரிவாயு விலையில் தொடர்ச்சியாக 4 ஆவது தடவையாகவும்  திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

முன்னதாக கடந்த . 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும்  வகையில் சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டன.

12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டு தற்போது மூவாயிரத்து 186 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது

5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 181 ரூபாவினால் குறைக்கப்பட்டு ஆயிரத்து 281 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் 2.3 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின்  விலை 83 ரூபாவினால் குறைக்கப்பட்டு 598 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது