முக்கிய செய்தி
அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
கடந்த சில தினங்களாக நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் எண்ணிக்கையில் 75 சதவீதமானோர் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் என சிரேஷ்ட ஆலோசகரும் வைத்தியருமான ஆனந்த விஜேவிக்ரம, எதிர்வரும் மழைக்காலத்துடன் டெங்கு நோயாளர்கள் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்தார்.ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் அண்மையில் வெளியிடப்பட்ட 101 கதை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.டெங்குவை ஒழிப்பதற்கு அனைவரின் உதவியும் முக்கியமானது என அவர் வலியுறுத்தினார், ஏனெனில் அரசாங்கமோ அல்லது சுகாதார அதிகாரிகளோ டெங்கு வைரஸை தாங்களாகவே கட்டுப்படுத்த முடியாது.இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் தெளிவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஜனவரி மாதம் முதல் இதுவரை 47,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.இதுவரை பதிவுசெய்யப்பட்ட நோயாளர்களில் அதிகமானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் இணைந்து இந்தப் பிரதேசங்களில் உள்ள குப்பைகளை சுத்தப்படுத்துவதற்கான விசேட முயற்சியொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.