Connect with us

பொழுதுபோக்கு

ஐரோப்பாவின் பிரபல நாடு விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!

Published

on

எங்கள் நாட்டுக்கு குடிவந்தால் கோடிக்கணக்கில் பணம் தருகிறோம் என பிரபல ஐரோப்பிய நாடொன்று அறிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் குடி வந்தால், இலங்கை பணமதிப்பின்படி ரூபா. 2.85 கோடி (92000 USD) வரை மானியம் தருவதாக அந்நாட்டு அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அயர்லாந்து தீவுகளில் மக்கள் தொகையை அதிகரிக்கும் முயற்சிகளில் ஒரு அங்கமாக இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை-1 முதல் தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம் என அயர்லாந்து செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

அயர்லாந்து தனது மேற்குக் கடற்பரப்பில் அமைந்துள்ள 20-க்கும் மேற்பட்ட அழகிய தீவுகளுக்கு புத்துயிர் அளிக்கும் விதமாகவே இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.

$92,000 வரையிலான மானியங்கள் இந்த தீவுகளில் காலியாக உள்ள அல்லது பழுதடைந்த வீடுகளை புதுப்பிக்க விரும்புவோருக்கு தான் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்தில் சொத்துக்களை யார் வாங்கலாம் என்பதில் எந்த தடையும் இல்லை என்றாலும், ஒரு இடத்தை வைத்திருப்பது அங்கு வாழ்வதற்கான உரிமையை உங்களுக்கு உத்தரவாதம் அளிக்காது என்பதை அந்நாட்டுக்கு குடியேற திட்டமிடும் நபர்கள் அறிந்திருக்க வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *